தனித்தமிழ்க் காவலர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை மற்றும் அறிவியல் தமிழறிஞர் பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 07.02.2019

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (07.02.2019) தனித்தமிழ்க் காவலர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை சொற்பொழிவும் மற்றும் அறிவியல் தமிழறிஞர் பெ.நா.அப்புசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையில் நடைபெற்றன. பொழிவாளர் மதுரை, கிடாரிப்பட்டி, லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முனைவர் ஜெயசங்கர் அவர்களின் “சங்க இலக்கியத்தில் நகர உருவாக்கமும் வளர்ச்சிநிலைகளும்” எனும் நூலை பிரான்சு, எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் வெளியிட உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்களும், இலக்கைத் தமிழ் ஆர்வலர் கோ. உதயமலர் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். அறிவியல் தமிழறிஞர் பெ.நா. அப்புசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவுப் பொழிவாளர் திருச்சி, சமால் முகமது கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் பொலிகையூர் ரேகா அவர்கள் “சங்க இலக்கியங்களில் காந்தள்” எனும் பொருண்மையில் நூல் வெளியீடும் சொற்பொழிவும் நடைபெற்றன. இவ்விரண்டு அறக்கட்டளைகளின் பொறுப்பாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலம் உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி அவர்கள் ஒருங்கிணைத்தார். முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி நா.ஹேமமாலினி அவர்கள் நன்றி நவின்றார்.