ஆசிரியர்களின் அனுபவங்கள் - ஆசிரியர் நாள் சிறப்பு நிகழ்வு

நிகழ்வு நாள் : 05.09.2020

ஆசிரியர்களின் அனுபவங்கள் - ஆசிரியர் நாள் சிறப்பு நிகழ்வு

தற்போது பணியிலிருக்கும் / பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என்று பதினான்கு ஆசிரியப் பெருந்தகைகள், தங்களது ஆசிரியர் பணியில் நடந்த சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் “ஆசிரியர்களின் அனுபவங்கள்” எனும் சிறப்பு நிகழ்வினை சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகம் இணைந்து வருகிற 5-9-2020, சனிக்கிழமை, மாலை 5.00 மணிக்குக் காணொலிக் காட்சியின் வழியாக வழங்கவிருக்கிறது.

திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையிலும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு தேனி மு. சுப்பிரமணி அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும் இக்காணொலிக் காட்சி வழியிலான சிறப்பு நிகழ்வுக்கு சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் அனைவரையும் வரவேற்று நிகழ்வை ஒருங்கிணைக்கிறார்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள், “ஆசிரியர்களின் அனுபவங்கள்” எனும் தலைப்பிலான ஆசிரியர் நாள் சிறப்பு நிகழ்வினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்குகிறார்.

இந் நிகழ்வில்
பதினான்கு ஆசிரியப் பெருந்தகைகள் தங்களது சுவையான அனுபவங்களை காணொலிக் காட்சி வழியாக நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்நிகழ்வின் இறுதியில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினரும், தேனி, நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியருமான முனைவர் த. தாழைச்செல்வி அவர்கள் நன்றியுரை வழங்குகிறார்.

இந்நிகழ்வு Google meet செயலி வழியாக நடைபெற இருக்கிறது.