ஆய்வு மாணவர் க.அறிவுக்கரசு நினைவு அறக்கட்டளை, வ.செ.குழந்தைசாமி அறக்கட்டளை (ம) புதுமைப்பித்தன் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 25.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இருபத்தைந்தாவது நாளான இன்று (25.02.2021) முற்பகல் ஆய்வு மாணவர் க.அறிவுக்கரசு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெற்றன. இதில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நூலகர் திரு.ரெங்கையா முருகன் அவர்கள் ‘வ.உ.சி.யும் தமிழ் அறிஞர்களும்’ என்னும் பொருண்மையில் பொழிவாற்றினார். தனது பொழிவில், தமிழ் சமூக வரலாற்றில் வ.உ.சியின் பன்முக செயல்பாடுகள் குறித்து திட்ப நுட்பமான அறிவுசார் கருத்தாடல்களை மிக விரிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து டாக்டர் வ.செ.குழந்தைசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெற்றன. இதில் சென்னை, தொல்லியல் அறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் “பண்டைத் தமிழரின் நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்” என்னும் பொருண்மையில் பொழிவாற்றினார். தனது பொழிவில் பல்லவர், சோழர், பாண்டியர் காலங்களில் நீர்நிலைகளின் அமைப்பு, பயன்பாடு, பராமரிப்பு, தொழில்நுட்பம், நிர்வாக அமைப்பு ஆகியனவற்றை எடுத்துரைத்து நில அமைப்பு தன்மைக்கு ஏற்ப பண்டைத் தமிழர்கள் நீர்நிலைகளை அமைத்துக் கொண்டனர் என்பதை கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகளைக் கொண்டு மிக விரிவாக விளக்கினார். இந்நிகழ்வை அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் அ.சதிஷ் அவர்கள் ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்றார். நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றினார். நிறுவன முனைவர் பட்ட மாணவி உமா அவர்கள் நிகழ்வின் இறுதியில் நன்றியுரை வழங்கினார்.
படச்செய்தி: நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தொல்லியல் அறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்களுக்கு நூல் வழங்கினார். உடன் நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நூலகர் திரு.ரெங்கையா முருகன், நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் அ.சதீஷ்.