தமிழாகரர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அறக்கட்டளை, பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் அறக்கட்டளை, தாமரைத்திரு கழகம் சுப்பையாபிள்ளை அறக்கட்டளை (ம) தினமலர் இராம சுப்பையர் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 26.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இருபத்தாறாவது நாளான இன்று (26.02.2021) முற்பகல் பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் அறக்கட்டளை சார்பாகச் சொற்பொழிவு நூல்வெளியீடும் நடைபெற்றது. இதில் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் பேரா.முனைவர் உலகநாயகி பழனி அவர்கள் ‘நாவேந்தரின் மேடைத் தமிழ்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் அவர்களின் மேடைப்பேச்சுத் தமிழில் ஆற்றிய புதுமைக்குறித்தும் மேடைப் பேச்சு தமிழுகென்று அவர் வகுத்த நெறிமுறைகளைக் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நாவேந்தரின் மேடைத்தமிழை நேருக்கு நேராக அமர்ந்து செவிவழிச் செய்தியாக கேட்டத்தொகுப்புகளை பாடத்திட்டமாக வடிவம் அமைத்து மேடைப்பேச்சு கலைக்காக ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த்துறை பாடத்திட்டத்தில் வைத்து 1000ற்கும் மேற்பட்ட தமிழ் பேச்சளார்களை உருவாக்குவதற்கு ஔவையின் மேடைத்தமிழ் பயன்பட்ட விதத்தை ஆண்டுகள் மேற்கோள்களுடன் நிகழ்ச்சி மேற்கோள்களுடன் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி எடுத்துரைத்தது. அறக்கட்டளை சொற்பொழிவிற்கு வந்திருந்தோர் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. ஔவை ஆற்றிய பல்கலைக்கழகப் பேச்சுகள், கல்லூரி வளாகங்களில் நூல் வெளியிடுகளில் இலக்கிய விழாக்களில் அலைகடலுக்கு அப்பால் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகிய தலைப்புகளில் நூலில் இடம்பெற்றுள்ளன. மேடைப்பேச்சுக் கலைக்கு 11 ஆண்டுகளுக்கு முன் பத்மஸ்ரீ விருது பெற்று நாவேந்தர் சொற்பொழிவு உலகத்திற்கே பெருமை சேர்த்தார்.
சொற்பொழிவுக்கு அறக்கட்டளைகள் பொறுப்பாளர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்களின் தலைமையுரையில் குறிப்பிட்டது ஆட்சிப்பணியில் இல்லாத ஒருவார் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி பண்பாட்டுத்துறையின் அரசு செயலாளராக பணியாற்றியது தமிழினம் மறக்க முடியாத ஒன்று என்று எடுத்துரைத்தார். மொழிப்பெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் முன்னிலை வகித்தார்.