பன்னாட்டுக் கருத்தரங்கம் ஐம்பெரும் பூதத்து இயற்கை

நிகழ்வு நாள் : 28.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் தமிழாய்வுப் பெருவிழாவில் இருபத்தெட்டாவது நாளான இன்று (28.02.2021) முற்பகல் ஐம்பெரும் பூதத்து இயற்கை என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் தொடக்கமாக நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கா.காமராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றினார். நோக்கவுரை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் நிறுவன இணைப் பேராசிரியருமான முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் ஆற்றினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி வாழ்த்துரை வழங்கினார். திருச்சி, தொல்லியல் ஆய்வு மையம் நிறுவனத் தலைவர் திரு.தி.லெ.சுபாஷ் சந்திர போஸ் கருத்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து வெவ்வேறு பொருண்மைகளில் நான்கு அமர்வுகளாக பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இறுதியாக இக்கருத்தரங்கில் கட்டுரை அளித்த பேராளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்தாக கட்டுரைத் தொகுப்புகள் அமைந்த ஐம்பெரும் பூதத்து இயற்கை என்னும் தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது. இறுதியாக நாட்டுப்பண்ணோடு பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.