தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் “மொழியியல் வகைமைகளும் கோட்பாடுகளும்", தேசியக் கருத்தரங்கம் மார்ச்சு 15, 2019

நிகழ்வு நாள் : 15.03.2019

தமிழ்மொழி (ம) மொழியியல் புலம்
“மொழியியல் வகைமைகளும் கோட்பாடுகளும்"
தேசியக் கருத்தரங்கம் மார்ச்சு 15, 2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிதிநல்கையுடன் தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறை (ம) தமிழாய்வு மையம் இணைந்து நடத்திய “மொழியியல் வகைமைகளும் கோட்பாடுகளும்” எனும் பொருண்மையிலான தேசியக் கருத்தரங்கம்.
கல்லூரி முதல்வர் முனைவர் செ.அசோக் அவர்கள் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். கல்லூரிப் பேரா.முனைவர் சு.நயினார் அனைவரையும் வரவேற்றார். துறைத் தலைவர் பேரா.முனைவர் க.சிவனேசன் முன்னிலையுரை வழங்கினார். ஆய்வு வளமையர்கள் அளித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலை உலகத் தமிழ்ச்சங்க மேனாள் இயக்குநர் முனைவர் க.பசும்பொன் அவர்கள் வெளியிட விருதுநகர் மாவட்ட தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மொழி(ம) மொழியியல் புல உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா சிறப்பு விருந்தினர்களுக்குச் சிறப்பு செய்ததோடு நன்றியுரை ஆற்றினார்.
நிறைவு விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பேரா.சு.அழகேசன் அவர்கள் நிறைவுரையாற்றினார். சாத்தூர் ஸ்ரீ இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி முதல்வர் முனைவர் செ.கணேஷ்ராம் அவர்கள் சான்றிதழ் வழங்கிச் சிறப்புரையாற்றினார். கல்லூரி பேராசிரியர் முனைவர் ந.அருள்மொழி நன்றியுரையாற்றினார். அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பேராசிரியர்கள், பல்வேறு பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளிலிருந்து வருகைபுரிந்த பேராசிரியர்கள் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தனர்.