உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாள் விழா

நிகழ்வு நாள் : 15.09.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன
நிறுவனர் நாள் விழா
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவிடக் காரணமாக அமைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழைப் போற்றும் வகையில் 15.09.2019 இன்று காலை 11 மணிக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்குக் கூடத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாள் விழா நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி (ம) ஆட்சிமொழிப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு க.பாண்டியராசன் அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் முன்னிலையில், கவிஞர் ஈ.விசய் வரவேற்புரையாற்றினார். முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தொகுத்த “அறிஞர்களின் பார்வையில் அண்ணாவின் பன்முகம்” என்னும் அண்ணாவின் பிறந்த நாள் சிறப்பு மலரை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி (ம) ஆட்சிமொழிப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு க.பாண்டியராசன் அவர்கள் வெளியிட மேனாள் நடுவண் நிதித்துறை மற்றும் சவுளித்துறை இணை அமைச்சர் திரு. செஞ்சி ந. இராமச்சந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
திரு. செஞ்சி ந. இராமச்சந்திரன் அவர்கள் ‘அண்ணா ஒரு வரலாறு’ என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார். திரு. ஆவடி குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கிட, நிறுவன முனைவர் பட்ட மாணவி செல்வி எ.கண்ணம்மாள் அவர்கள் நன்றி நவின்றார். இந்நிகழ்வில் நிறுவனப் பேராசிரியர்கள், முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




படச்செய்தி: 15.09.2019, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாள் விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி (ம) ஆட்சிமொழிப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு க.பாண்டியராசன் அவர்கள் தலைமையுரையில் உடன் பேராசிரியர் பா.இராசா, மேனாள் நடுவண் நிதித்துறை மற்றும் சவுளித்துறை இணை அமைச்சர் செஞ்சி ந. இராமச்சந்திரன், திரு. ஆவடி குமார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன், பேரா. ம.செ.இரபிசிங், ஆசிரியர் கூட்டணி மேனாள் தலைவர் ந.கோபு மற்றும் முனைவர் ஈ.விசய் ஆகியோர்.