தமிழ்த்தாய் 71 தமிழாய்வுப் பெருவிழா தொடக்க விழா

நிகழ்வு நாள் : 01.02.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழ்த்தாய் 71 தமிழாய்வுப் பெருவிழா தொடக்க விழா
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 65, 66, 67, 68, 69, 70ஆம் பிறந்தநாள் உயராய்வு நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி திங்கள் முழுவதும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடத்தியும் ஆய்வு மற்றும் அரிய நூல்களை வெளியிட்டும் மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தியும் தமிழ்த்தாய்க்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழாய்வுப் பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இவ்வாண்டும் 2019 பிப்ரவரி திங்கள் முழுவதும் தமிழ்த்தாய் 71 தமிழாய்வுப் பெருவிழா நடைபெறுகின்றது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணிக்கு தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமான திரு. க. பாண்டியராஜன் அவர்களின் விழாத் தொடக்கவுரையாற்றினார். அவர் தம் உரையில் என் இனிய அன்புத் தமிழ் ஆர்வலர்களே மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எண்ணத்தில் உதித்த செயல் வடிவம் பெற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்தாய் 71 தமிழாய்வு பெருவிழாவை துவக்கி வைப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்து, இவ்வாண்டுக்கு மட்டுமே 8 திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
தமிழ்த்தாய் 71 பெருவிழாவின் இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக கல்வெட்டியல், தொல்லியல் மற்றும் அகழாய்வு ஓராண்டு பட்டயப்படிப்பு துவங்குவது பெருமகழ்ச்சிக்குரிய விசயம் இந்தியாவில் அதிக அளவு அகழாய்வு நிபுணர்கள் வருவது தமிழகத்திலிருந்து மிக முக்கியமான காரணம் புரட்சித் தலைவர் அவர்கள் முதல் பல விசயங்கள் குறித்து தமிழுக்காக செய்தது தமிழ் பண்பாட்டுக்காக செய்தது பெருமளவு பேசப்படவில்லை அதில் முக்கியமான ஒன்று அகழாய்வு சார்ந்த பட்டயபடிப்பு முதல்ல தொல்லியல் துறையில் இந்தியாவிலேயே முதல் முறையாக கொண்டுவரப்பட்டது தமிழகத்தில்தான். நடவணரசின் தொல்லியல் துறை நிறுவன சார்பணிக்கு அகழாய்வு நிபுணர்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் தமிழகத்திலிருந்துதான் வருகிறார்கள். அதற்கு என்ன காரணமென்றால் முதன்முதலில் அகழாய்வு துவங்கியது தமிழகத்தில்தான். அதை தொடங்கியவர் புரட்சித் தலைவர். சி கட்டுப்பாடுகள் உள்ளன. 8 நபர்களுக்கு மேல் தொல்லியல் பட்டயத்தில் சேரமுடியவில்லை. அதனால் இன்னொரு பட்டயப்படிப்பு தமிழக அரசின் சார்பான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று தொடங்கப்படும் தொல்லியல் பட்டப்படிப்பு நிபுணர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் அதிக அளவு தேவைகள் உள்ளன. இப்பொழுது இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் தொல்லியல் சார்ந்த ஒரு புரிதல் பல அங்கங்கள் குறிப்பாக கல்வெட்டியல் சார்ந்த நிபுணர்கள் தேவைகள் மிக அதிகமாக உள்ளது. ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் தொல்லியல் துறையில் கல்வெட்டியல் உள்ளது. மிக மிக முக்கியமானத் துறையாக உலக அரங்கில் இது பார்க்கப்படுகிறது. பல கண்டுபிடிப்புகள் இன்று உலக அளவில் பேசப்படுகின்றன. இந்த கல்வெட்டியல் தொடர்பாக சென்ற மாதம் ஒரு நிகழ்ச்சி வைத்திருந்தோம். உலக அளவில் அறியப்பட்ட கனடாவை சேர்ந்த பேராசிரியர் முக்கியமான கல்வெட்டு தொடர்பாக பேசினார். உலகத்தில் இருக்கின்ற பல ஜனரஞ்சக அது பிரபலமானது என்னவென்று கேட்டால் முசிறி என்பது திருச்சி அருகே உள்ள ஊர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை என்றும் பட்டணம் என்று கேரளாவில் இருக்கின்ற என்ற ஊர். அதுதான் முசிறிப்பட்டணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து இந்த அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட அகழாய்வு அதனுடைய அறிக்கை ஆய்வு முழுமையாக வெளியீடு செய்யப்பட்டது. எப்படி வந்து சேரநாடு என்பது நமது ஊராக இருந்ததோ முசிறிப்பட்டணம் என்பது சேரநாட்டுடன் சேர்ந்த ஒரு இடம். இதை பற்றி அழகாக எடுத்து சொன்னபோது எத்தனைப் பேர் இதில் வேலை செய்தார்கள் என்றும் பார்த்தேன். ஒரு 1500 பேர் அந்த அகழாய்வு ஆராய்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் வெளிநாட்டு அறிஞர்கள் 150 பேர் இருந்திருப்பார்கள். மற்றப்படி முழுக்க இங்கிருந்த மாணவர்கள் அந்த மாணவர்களை வைத்தே இரண்டு வருட ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் நான் யுனஸ்கோ சென்றிருந்தபோது இந்த வருடம் யுனஸ்கோவில் மண்ணின் மொழிகளின் பாதுகாப்பு ஆண்டாக கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய நோக்கு ஒரு விசயத்தை மையப்படுத்தி அதைவைத்து உலகம் முழுக்க நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியும் இன்றைக்கு ஐக்கிய நாட்டு சபையில் இருக்கிற அங்கங்களில் மிக அதிகமாக மதிக்கத்தக்க அமைப்பு யுனஸ்கோ ஆகும்.
இந்த ஆண்டு செலவு செய்ய இருக்கக் கூடிய 100 மில்லியன் டாலர் ஏறக்குறைய இந்திய மதிப்பில் 700 கோடி அவர்கள் செலவு செய்ய இருக்கிறார்கள். இந்த வருடம் மூன்றில் ஒரு பங்கான ஏறக்குறைய 200 கோடி தொல்லியல் மற்றும் தொல்லியல் சார்ந்த விசயங்களுக்கு செலவு செய்ய இருக்கிறார்கள். பல தொல்லியல் நிகழ்வுகள் ஒரு தமிழ் சார்ந்த தொல்லியல் ஆய்வு செய்யக்கூடிய இடங்கள் ஒன்பது நாடுகளில் உள்ளது. மலேசியா, கம்போடியா, லவோசியா இது போன்ற நாடுகளில் ஆய்வு செய்யப்படுகிறது. மூன்று நாள்களுக்கு முன்னால் யுனஸ்கோவில் நடந்த மண்ணின் மொழி தொடர்பான நிகழ்வில் 1200 பேர் கலந்துகொண்டனர். அதில் கலந்து கொண்டவர்களுக்கு 28 மொழிகள் தெரிந்தவர்கள். அவர்கள் மண்ணின் மொழியில் எதை பேச ஆரம்பித்தார்கள் என்றால் பழங்குடியினர் மொழிகளாகிய அழியக்கூடிய மொழிகளைக் பேசி அசத்தினார்கள். யுனஸ்கோ 8 வருடங்களுக்கு முன்னால் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள் (மொழி வரைபடம்). உலக அளவில் பெரிய தாக்கத்தைக் கொண்டு வந்தது. அந்த மொழி வரைபடத்தை உருவாக்கியவர் ஒரு இந்தியர். தமிழ் நன்றாகத் தெரிந்தவர். இந்திரஜித் பானர்ஜி என்பவர் இந்தியர். இவர் யுனஸ்கோவில் ஒரு இயக்குநர் அளவில் இருப்பது ஒரு அதிசயம். யுனஸ்கோவில் இருக்கின்ற 10 பிரிவுகளில் ஒரு பிரிவிற்கு இவர் தலைவர். அவரை பார்க்கச் சொன்னார் தமிழ் ஆர்வலர் மொரிசீயசின் துணை ஜனாதிபதி. திருக்குறளை உலகப் பொது நூலாக அறிவிப்பது தொடர்பாக சந்தித்தேன். திருக்குறள் மீது அவருக்குத் தனி ஆர்வம் இருந்தது. அப்பொழுது அவர் வந்து இந்த மாதிரி யுனஸ்கோவில் ஒரு நிகழ்வு இருக்கிறது. அதில் உரையாற்றுங்கள் என்று தெரிவித்தார். தமிழை மையப்படுத்தி ஒரு மாநாடு சென்னையிலோ அல்லது பாண்டிச்சேரியிலோ நடத்த வேண்டும் என்று கூறினார். யுனஸ்கோ சென்று பார்க்கும் பொழுது அவர்மேல் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள். அவர் எப்படி தமிழ் மொழியை சேர்த்தார் என்பது எல்லோருக்கும் ஒரு கேள்வியாக உள்ளது. அவர் ஒரு குறிப்பு கொடுத்தார் மண்ணின் மொழியைப்பற்றி முக்கியமான ஒரு விசயத்தை கூறுங்கள். மொழி என்பது பண்பாட்டின் வெளிப்பாடு. ஒரு மொழி அழியும்போது அம்மொழி பேசும் மக்களின் பண்பாடும் அழிந்துவிடும். உலகில் உள்ள 6500 மொழிகளில் 3000 மொழிகள் அடுத்த வரும் ஆண்டுகளில் அழிந்துவிடும். சில மொழி ஏன் அழிந்தது என்றால் அதன் கலாசாரம் அழிந்தது. ஒரு புலம் பெயர்ச்சி என்பது சமுதாய ரீதியான புலப்பெயர்ச்சி, அரசியல் ரீதியான புலப்பெயர்ச்சி வரும்பொழுது குறிப்பாக பிரிட்டீஷிலிருந்து சிறைவாசிகள் ஒரு கப்பலில் சென்று தங்களின் வாழ்க்கைக்கு ஆஸ்திரேலியாவிற்குச் சென்று கால்பதித்து அங்கிருந்து அதிகபட்சமாக அங்குள்ள சமுதாயத்தினரை அழித்திருக்கிறார்கள். ஒலிவியா நாட்டிலிருந்து ஒருவர் பேசும்பொழுது அழகாக பேசினார். மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார். அமெரிக்க என்னவெல்லாம் செய்தது பழங்குடியினரை எப்படி அழித்தார்கள் என்று கோபமாக சொன்னார். 30 விதமான பழங்குடி மக்களின் மொழிகளை பேசக்கூடியவர்கள் 99 விழுக்காடு கொல்லப்பட்டுவிட்டனர்கள். இது மாதிரி ஸ்பெயின் நாடும் போர்ச்சுகீசிய நாடும் பிரான்ஸ் நாடும் அன்றைக்கு அவர்கள் இன பரவலாக்கத்திற்கு அடக்குமுறையை கையாண்டிருக்கின்றனர். உலகத்தில் இருக்கக்கூடிய ஒரு சதவீதத்திற்கு மேல் பேசக்கூடிய மொழிகள் 26 மொழிகள் இருக்கின்றன. இந்த மொழிகள் பாதிக்குமேல் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் எங்கெல்லாம் சென்றிருக்கிறார்களோ அர்ஜென்டினாவாக இருக்கட்டும் தென்அமெரிக்காவாக இருக்கட்டும் வடஅமெரிக்காவா இருக்கட்டும் அங்கே இருக்கக்கூடிய பழங்குடியினர்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்க அழிக்கப்பட்ட பழங்குடியினர் அந்நாட்டின் அடையாளச் சின்னமாக இருக்கிறார்கள். இன்டுவன்ட் என்ற பழங்குடி மக்களின் சாத்திரங்கள் பழங்குடி தமிழர்களின் சாத்திரம் போன்று இன்றைக்கு நம்ம ஊரு அம்மன் கோவிலில் என்ன பேசுவார்களோ அதே போன்று பேசச் செய்வதுமாக உள்ளார்கள். ஒரு கட்டத்தில் ஏன் இந்த மொழிகள் அழிந்தன என்ற கேள்வி வருகிறது. மிகப்பெரிய மேலை கலாச்சாரங்கள் தொடர்ந்து வருகிறது. அதை காப்பாற்றும் விதமாக இந்த வருடம் பழங்குடியினரை போற்றும் வகையில் இந்நிகழ்வை யுனஸ்கோ நடத்தி வருகிறது.
தமிழ்மொழி என்பது பிறமொழிகளின் ஆளுகைக்குட்பட மற்ற மொழிகளை அழிக்காமல் உயிர்ப்புடன் இருப்பது தமிழ்மொழி மட்டும்தான். இன்றைக்குக்கூட பத்தரைக்கோடி மக்கள் பேசக்கூடிய மொழியாக தமிழ்மொழி இருக்கிறது. தமிழுக்கு இருக்கக்கூடிய எண்ணற்ற சவால்களை நாள்தோறும் சமாளித்துக் கொண்டு வருகிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்றால் புது சொற்கள் உருவாகுவதும், புது சிந்தனை உருவாகுவதும், புதுப் படைப்புகள் உருவாகுவதும் இதன் மூலம்தான். பாரீசில் இருந்தபொழுது பலர் பேசிய செய்திகளை கேட்டபொழுது ஏன் பல மொழிகள் அழிந்தன? பிரன்சு, ஸ்பானிஷ், டச்சு மற்றும் பிரிடீசுகாரர்கள் ஆண்ட நாடுகளில் அந்நாடுகளின் கலாச்சாரம் அழிந்தபோது தமிழின் பண்பாடு மட்டும் ஏன் அழிக்க முடியவில்லை? தமிழகத்திலும் பண்பாடு, மதம் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது ஆனாலும் ஏன் தமிழ் வளர்ந்துகொண்டிருந்தது. தமிழ் ஒரு மண்ணின் மொழி. தமிழ் ஒரு புலம்பெயர்ந்து வளர்ந்துகாட்டிய மொழி. நமக்குத் தெரியும் அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்வது எவ்வளவு கடினம் என்ற சவால் இருந்தாலும் எத்தனை சவால்கள் இருந்தாலும் எத்தனை மொழிகள் இச்சவாலை சமாளிக்க முடியாமல் இறந்துவிட்டன. இத்விட் என்ற மிகப்பெரிய மொழி கனடாவில் இருந்தது. ஆதிகுடிமக்களில் கொல்லப்பட்டவர்கள் போக மீதமுள்ளவர்களை எஸ்கிமோ என்று கூறுகிறோம். அவர்கள் பேசிய மொழி இத்விட் மொழி. அவர்கள் ஏன் அழிந்தார்கள். அவர்கள் மொழியை ஏன் அழிக்கவிட்டார்கள். இந்தக் கேள்வி மிக முக்கியமான கேள்வியாக இருந்து வந்தது. தமிழை ஆய்வு செய்ய வேண்டும். தமிழ் எப்படி தன் வேர்களைவிட்டு விலகாமல் இளமையாக தன்னை வைத்துக்கொண்டு உருவாக்கிக்கொண்டு எப்படித் தமிழ் தன்னை வளப்படுத்திக்கொண்டது என்பதனை உலக அளவில் ஆய்வு செய்வதற்கு யுனஸ்கோ அமைப்பே தயாராக இருக்கிறது. செம்மொழியிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டு செம்மொழியானது தமிழ் மொழியைத் தவிர வேறெந்த மொழியும் இல்லை. தெலுங்கும்சரி, கன்னடமும்சரி, மலையாளமும்சரி, பெங்காலியும்சரி செம்மொழி என்று மத்திய அரசே செம்மொழி என்று அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழ்மொழி உலக அளவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியை பத்தரைக்கோடி பேர் பேசுகிறார்கள் என்றால் பெங்காலி மொழியை 25 கோடி பேர் பேசுகிறார்கள். தெலுங்கு பேசுபவர்கள் 12 கோடி பேர்கள் இருக்கிறார்கள்.
ஒரு குழந்தையை பிறப்பித்து அந்த குழந்தையே செம்மொழியாக உருவான பிறகும் தானும் உயிரோட்டமுள்ள மொழியாக விளங்குகிறது தமிழ்மொழி. சைனாவில் ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும் என்று சைனா முழுவதும் ஒரே மொழியாக மான்டரின் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போன கணக்கெடுப்பின்படி 19500 மொழிகள் பேசப்படுகின்றன. 10000 நபர்களுக்கு மேல் பேசக்கூடிய மொழிகள் 121. யுனஸ்கோவின் மதிப்பீட்டின்படி 10,000 நபர்கள் பேசக்கூடிய மொழி அழியக்கூடிய மொழி. என்ன ஆய்வு செய்கிறார்கள் என்றால் தமிழ் எப்படி இளமையாக இருக்கிறது. என்ன நடந்தது. தமிழில் பேசினால் அபராதம் என்று பதின்மப் பள்ளிகளில் இருந்த சவால்களைத் தாண்டி, ரீயுனியனில் பிரன்சு மொழியைத் தவிர வேறு எந்த மொழியைப் பேசினாலும் அபராதம் என்று இரண்டு தலைமுறையாக இருந்து வந்தது. அதைக் கடந்து வந்த தலைமுறையில் 6 இலட்சம் பேர் தமிழ்மொழியைப் பேசுகின்றனர்.
இந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள 71 ஆய்வுக் கட்டுரைகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், சிறப்புச் சொற்பொழிவுகள், நூல்கள் வெளியீடு, கவியரங்கம் திருக்குறள் முழக்கொலி போன்ற கட்டமைப்பு கொண்ட இந்நிறுவனம், அம்மா நிறுவனமாக இருந்து வருகிறது. ஏழாவது ஆண்டாக, தமிழ்த்தாய் பெருவிழாவாக நடத்தி வருகின்றோம். இது போன்ற நிகழ்வுகள், பல இடங்களில் பல கல்லூரிகளில் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்த ஆண்டிலிருந்து, இந்நிகழ்வின் ஒவ்வொரு அரங்கும், 1000 பேர் கலந்துகொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்! 72 நூல்கள் 72 சொற்பொழிவுகள் என்றாலும் தனித்தனி இடங்களில் நடைபெற வேண்டும். அடுத்தமுறை கோவையில் நடத்தலாம்! பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இன்னும் வீரியத்துடன் செயல்பட வேண்டும்! இந்த நல்ல வாய்ப்பிற்கு நன்றி கூறிவிடை பெறுகிறேன்.
நன்றி ! வணக்கம்!

அதை தொடர்ந்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுசெயலர் திரு. இரா. வெங்கடேசன் இ.ஆ.ப., அவர்கள் கருத்துரையாற்றினார். தொடர்ந்து முனைவர் பால ரமணி, மருதூர் அரங்கராசன், முனைவர் இரா. பஞ்சவர்ணம், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், முனைவர் கோ. பெரியண்ணன், கவிஞர் கூரம் மு. துரை, முனைவர் மா. பாரதி சுகுமாரன் ஆகியோரும் நோக்கவுரையாற்றினார்கள். இந்நிகழ்வில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் நிறுவன பேராசிரியர்கள் முனைவர் பா. இராசா, முனைவர் து. ஜனகி ஆகியோர் வரவேற்புடன் தொடங்கிய தொடக்க விழாவில் முனைவர் வி.இரா. பவித்ரா அவர்கள் நன்றி நவின்றார். இந்நிகழ்வுகளில் நிறுவன ஆய்வு மாணவர்கள், கல்வி அலுவலர்கள், நிருவாகப் பணியாளர்கள் மற்றும் தமிழார்வலர்கள் கலந்துகொண்டனர்.