டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம், ஈ.வெ.ரா. பெரியார், ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளைகள்

நிகழ்வு நாள் : 04.02.2020

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் நான்காம் நாள் (04.02.2020) நிகழ்வில் முற்பகல் டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அறக்கட்டளையின் சார்பில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக மொழிப்பெயர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சா.விசயராஜேஸ்வரி அவர்கள் “வ.அய்.சு.வின் ஆய்வுத்தடம்” என்ற தலைப்பிலும், நண்பகல் ஈ.வெ.ரா. பெரியார் அறக்கட்டளையின் சார்பில் கன்னியாகுமரி ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ்.மேரிசுபா செல்வராணி அவர்கள் “நிகழ்த்துகலை வடிவங்களில் புராணக் கூறுகள்” என்ற தலைப்பிலும், பிற்பகல் ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளையின் சார்பில் சேலம், அரசு கலைக்கல்லூரி, தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஐ.பிரேமலதா அவர்கள் “தமிழிலக்கியத்தில் அச்சம்” ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவுகளும் நூல் வெளியீடுகளும் நடைப்பெற்றன.
படச்செய்தி : 04.02.2020 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்த்தாய்72- தமிழாய்வுப் பெருவிழாவில் “வ.அய்.சு.வின் ஆய்வுத்தடம்” என்ற தலைப்பில் முனைவர் சா.விசயராஜேஸ்வரி அவர்கள் சொற்பொழிவாற்றினார். உடன் நிறுவன முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் வி.இரா. பவித்ரா, பொழிவாளர்கள் முனைவர் எஸ்.மேரிசுபா செல்வராணி, முனைவர் ஐ.பிரேமலதா மற்றும் நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார்.