73 அரிய நூல்கள், 73 ஆய்வு நூல்கள், பொன்விழாக் கட்டுரைகள் ஆறு தொகுப்பு, 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணை வழங்குதல், திருக்குறள் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற 15 படைப்பாளர்களுக்குப் பரிசு வழங்குதல்

நிகழ்வு நாள் : 24.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இருபத்திநான்காவது நாளான இன்று (24.02.2021) முற்பகல் 73 அரிய நூல்கள், 73 ஆய்வு நூல்கள், பொன்விழாக் கட்டுரைகள் ஆறு தொகுப்பு, 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணை வழங்குதல், திருக்குறள் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற 15 படைப்பாளர்களுக்குப் பரிசு வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் அரசுச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப. அவர்கள், இந்த பொன்விழா ஆண்டையொட்டி தயாரிக்கப்பட்ட ஆய்வுகட்டுரைத் தொகுப்பானது அம்மா அவர்களின் பிறந்த நாளில் வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. என அமைச்சர் பெருமகனார் கூறினார். குறிப்பாக புரட்சித் தலைவி அம்மா அவர்களால் திருக்குறள் ஓவிய காட்சிக்கூடம் கொண்டு வரப்பட்டது. காட்சிக்கூடத்தின் சார்பாக திருக்குறள் கருத்தமைந்த ஓவியங்கள் தேர்ந்தெடுத்து பரிசுத்தொகை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். உடன் நிறுவனப் பேராசிரியர்கள் (ம) நிருவாக அலுவலர்கள் முன்னிலை வகித்தார்கள், மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் (ம) தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் திரு.க.பாண்டியராஜன் அவர்கள் 73 அரிய நூல்கள், 73 ஆய்வு நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு எண்ணற்ற தமிழ் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் எனும் பெருமை அம்மா அவர்களுக்கு உண்டு. இப்படித் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் பணியாற்றிய அம்மா அவர்களின் பிறந்த நாளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்தாய் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறினார். மேனாள் தென்சென்னைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர், முதுமுனைவர் ஜெ.ஜெயவர்தன் அவர்கள் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் பெருந்தலைவர் திரு.வேளச்சேரி எம்.கே.அசோக் அவர்கள் தமிழ்ப் பரம்பரைச் சித்த மருத்துவப் பயிற்சிப் பட்டயச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.கலை (ம) சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை ஆய்வு உதவியாளர் முனைவர் ஈ.விஜய் நிகழ்ச்சினை தொகுத்து வழங்கினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (ம) தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இனிதே நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.