கலாநிலையம் டி.என்.சேசாசலம் அறக்கட்டளை (ம) தினமணி அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 11.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பதினோறாவது நாளாக 11.02.2021 முற்பகல் கலாநிலையம் டி.என்.சேசாசலம் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெற்றது. இதில் புதுச்சேரி, தாகூர் அரசுக் கலை (ம) அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.விஜயராணி அவர்கள் ‘‘வரலாற்றியல் நோக்கில் கபிலர் பாடல்கள்’ என்னும் பொருண்மையில் பொழிவாற்றினார். நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்க எழுதிய ‘குறுந்தொகையில் ஓரெழுத்து பொருள் நுட்பம்’ என்னும் நூலை நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வெளியிட மதுரை, உலகத் தமிழ்ச் சங்க மேனாள் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் பெற்றுக்கொண்டார். தமிழ்ச்செம்மல் கவிஞர் சுரா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வை அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்றார். முதுகலை மாணவர் பெ.பிரவின் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். முனைவர் பட்ட ஆய்வாளர் பு.இலக்கியதென்றல் அனைவருக்கும் நிகழ்வின் இறுதியில் நன்றியுரை வழங்கினார்.

11.02.2021 முற்பகல் தினமணி அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு நடைபெற்றது. நிகழ்விற்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தமிழியல்புலத் தலைவர் முனைவர் சு.பாலசுப்பிரமணியன் ‘‘தமிழ் அச்சு ஊடகங்கள்: இன்றைய நிலையும் நிலைப்பும்’’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்வை அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்றார். முதுகலை மாணவர் பெ.பிரவின் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். முனைவர் பட்ட ஆய்வாளர் பு.இலக்கியதென்றல் நன்றியுரை ஆற்றினார்.