நூலக நாள் மற்றும் உலக மரபு நாள் விழா

நிகழ்வு நாள் : 23.04.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
நூலக நாள் மற்றும் உலக மரபு நாள் விழா
சென்னை, தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நூலக நாள் மற்றும் உலக மரபு நாள் விழா நிகழ்ச்சி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் இன்று (23.04.2019) நடைபெற்றது. சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்த் துறை மேனாள் தலைவரும் பேராசிரியருமான முனைவர் தி.இராசகோபாலன் அவர்கள் நூலக நாள் விழாக் கருத்துரையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனச் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புல இணைப் பேராசிரியர், முனைவர் ஆ. மணவழகன் அவர்கள் உலக மரபு நாள் விழாக் கருத்துரையும் வழங்கினர். பாலம் இதழாசிரியர் மற்றும் நூலகர் திரு. பாலம் கல்யாணசுந்தரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கைப் பொறுப்பாளர் பேரா. ம.செ.இரபிசிங், சமீர் நூலகர் மற்றும் நிருவாக அலுவலர் திரு. இராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகர் திரு.இரா.பெருமாள்சாமி அவர்கள் வரவேற்புரையாற்றிட, நூலகர் முனைவர் பி.கவிதா அவர்கள் நன்றி நவின்றார். இந்நிகழ்வில் நிறுவன முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், பல்வேறுத்துறைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
படச் செய்தி: 23.04.2019 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலக நாள் மற்றும் உலக மரபு நாள் விழாவில் கருத்துரையாளர் முனைவர் தி.இராசகோபாலன் அவர்களுடன் (இடமிருந்து வலம்) முனைவர் பி.கவிதா, முனைவர் ஆ. மணவழகன், திரு. இராமமூர்த்தி, முனைவர் கோ.விசயராகவன், திரு. பாலம் கல்யாணசுந்தரம், பேரா. ம.செ.இரபிசிங், திரு.இரா.பெருமாள்சாமி ஆகியோர்.