உலகத் தமிழாராய்ச்சி நிறுவன - நிறுவன நாள் விழா

நிகழ்வு நாள் : 22.10.2019

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா 22.10.2019 இன்று காலை 11 மணிக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றிட சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலப் பேராசிரியர் முனைவர் பா. இராசா வரவேற்புரையாற்றினார். உயர் கல்வி மன்ற மேனாள் செயலாளர் கலைமாமணி முனைவர் கரு. நாகராசன் அவர்கள் நிறுவன நாளுரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் பேராசிரியர் மற்றும் இயக்குநர் (பொ.) முனைவர் அன்னிதாமசு, மேனாள் பேராசிரியர் முனைவர் ச. சிவகாமி, மேனாள் துணை இயக்குநர் திரு. க.ந. வீரபாகு சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தொடக்க நிகழ்ச்சியாக மயூரி நிகழ்த்துக் கலையகத்தின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முதுகலை மற்றும் ஆய்வு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன “நிறுவன நாளை”யொட்டி நிறுவன மாணவர்களுக்கிடையே நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள ஆய்விருக்கைகளின் பொறுப்பாளர்கள், தனிநபர்கள் அமைப்புகளால் நிறுவப்பட்டுள்ள ஆய்விருக்கைகளின் பொறுப்பாளர்கள், முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் நன்றி நவின்றார். நிகழ்ச்சியினை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை ஆய்வு உதவியாளர் முனைவர் ஈ.விசய் தொகுத்து வழங்கினார்.

படச்செய்தி : சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா 22.10.2019 உயர் கல்வி மன்ற மேனாள் செயலாளர் கலைமாமணி முனைவர் கரு. நாகராசன் அவர்கள் நிறுவன நாளுரையில் உடன் முனைவர் கு.சிதம்பரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் (பொ.) முனைவர் அன்னிதாமசு, மேனாள் பேராசிரியர் முனைவர் ச. சிவகாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன், மேனாள் துணை இயக்குநர் திரு. க.ந. வீரபாகு சுப்பிரமணியன் பேராசிரியர் பா.இராசா மற்றும் முனைவர் ஈ.விசய்.