உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் நிறுவன மாணவர்களுக்குச் சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்புகள் (பிரெஞ்சு (ம) இந்தி மொழி) தொடக்க விழா

நிகழ்வு நாள் : 02.12.2019

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் வளமையினையும் அதன் சிறப்புகளையும் பிறநாட்டவர் / பிற மொழியினரிடையே கருத்து பரிமாற்ற வழி மேற்கொள்ள வசதியாக மாணவர்களுக்குப் பிறமொழியில் புலமைக் கொண்டுள்ள சிறந்த மொழி ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு மொழிப்பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு
2019-2020ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று (02.12.2019 - திங்கட்கிழமை) சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராசன் அவர்கள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றிட, தமிழ்மொழி (ம) மொழியியல் புல இணைப் பேராசிரியர் முனைவர்
பெ. செல்வக்குமார் வரவேற்புரையாற்றினார். மகாத்மா காந்தி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் விஜேந்திரன் சீமன் வாழ்த்துரை வழங்கிட, பிரெஞ்சு மொழிப் பயிற்றுநர் பேராசிரியர் சுதா சுரேஷ், இந்தி மொழிப் பயிற்றுநர் திரு. பா. சர்தார் சிங்கு ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறுவன முனைவர் பட்ட மாணவர்
ச. ஆசைக்கண்ணு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட, ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், முதுகலை தமிழ் மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


படச்செய்தி : சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் நிறுவன மாணவர்களுக்குச் சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்புகள் (பிரெஞ்சு (ம) இந்தி மொழி) தொடக்க விழா 02.12.2019: மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்
க. பாண்டியராசன் அவர்கள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். உடன் நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், பேராசிரியர் (ஓய்வு) முனைவர் ம.செ.இரபிசிங், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன், மகாத்மா காந்தி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் விஜேந்திரன் சீமன், பிரெஞ்சு மொழிப் பயிற்றுநர் பேராசிரியர் சுதா சுரேஷ் மற்றும் இந்தி மொழிப் பயிற்றுநர் திரு. பா. சர்தார் சிங்கு.