புதிய அணுகுமுறைகளின் வழி தமிழ்மொழி கற்பித்தல் முறைகளும் கருத்துப் புலப்பாடும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 05.02.2020

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் ஐந்தாம் நாள் (05.02.2020) நிகழ்வாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் சார்பில் “புதிய அணுகுமுறைகளின் வழி தமிழ்மொழி கற்பித்தல் முறைகளும் கருத்துப் புலப்பாடும்” இரண்டு நாள் (05.02.2020 – 06.02.2020) பன்னாட்டுக் கருத்தரங்க தொடங்க விழா மற்றும் அமர்வுகளும் கருத்தரங்க கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
படச்செய்தி : 05.02.2020 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்த்தாய்72- தமிழாய்வுப் பெருவிழாவில் நடத்தப்பெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் நா.சுலோசனா மற்றும் பெரியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி மாரி, நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் (ம) தலைவர் முனைவர் ஆ.ரா.சிவகுமாரன், இலங்கை, தேசியக் கல்வி நிறுவகம் கலாநிதி முருகு தயாநிதி, நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. ச.ஆசைக்கண்ணு ஆகியோர்.