அயல் நாடுகளில் தமிழாய்வுகள் (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)

நிகழ்வு நாள் : 07.06.2020

சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் அறிஞர் அண்ணா, தவத்திரு தனிநாயக அடிகளார் போன்ற அறிஞர் பெருமக்களால் உருவாக்கப்பட்டுத் தமிழ்ச்சமூகம் பயனடையும் வகையில் பல உயராய்வுகளை முன்னெடுத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 'மாண்புமிகு மேனாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா' அவர்களும் 'மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி' அவர்களும் எண்ணற்ற திட்டங்களுக்காக ஏராளமான நிதி ஒதுக்கி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உலகத் தரத்தில் உயர்த்தியுள்ளார்கள். கற்றல் கற்பித்தல் மட்டுமின்றி உலகில் வாழும் தமிழர் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழறிஞர்களுடன் இணைந்து கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் சிறப்புச் சொற்பொழிவுகளும் நடத்தி கொண்டிருக்கிறது. தற்பொழுது ஊரடங்கு காரணமாக இத்தகைய ஆய்வுகள் அனைத்தும் இணைய வழியில் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், ஜெர்மனி, கோலோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்கள் 07.06.2020 அன்று “அயல்நாடுகளில் தமிழாய்வுகள்” என்னும் பொருண்மையில், இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கில் பொழிவாற்றினார். பங்கேற்பாளர்களின் பின்னூட்டங்கள் தேர்வுக்கேற்ப அவரவர் மின்னஞ்சலில் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.

கருத்தரங்கப் பொழிவாளர்:
பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்,
கோலோன் பல்கலைக்கழகம், ஜெர்மனி

பொருண்மை: ”அயல் நாடுகளில் தமிழாய்வுகள்”

Time: Jun 7, 2020 04:00 PM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83889126603?pwd=QTlPZ3VCRmU4NUJyWlptM0dET08xUT09
Meeting ID: 838 8912 6603
Password: 8MUW9L

ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர் கோ. விசயராகவன்,
இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

முனைவர் து. ஜானகி,
அயல்நாட்டுத் தமிழர்புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்,
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம்.

முனைவர் கி. துர்காதேவி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம்.